பரபரக்கும் அரசியல் களம் : 3 நாட்களில் கூட்டணி குறித்து முடிவு - ராமதாஸ் அறிவிப்பு..!
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரும் தனித்தனியே செயல்பட்டுவருகின்றனர்.
இதற்கிடையில், இன்னும் சில தினங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் சூழலில், தமிழ்நாடு அரசியல் கட்சிகளிடையே கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடந்துவருகிறது.
இந்நிலையில், அன்புமணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கை கோர்த்த நிலையில், ராமதாஸின் கூட்டணி நிலைப்பாடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையே கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்த நிலையில், தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.தொடர்ந்து பேசிய அவர், 3 நாட்களில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். மாற்றங்கள் வருவது இயற்கை என்றும், ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் உறுதியாக இருப்போம் எனவும் ராமதாஸ் குறிப்பிட்டார்.