×

மதுக்கடைகள் அத்தியாவசியம் அல்ல... உடனடியாக மூட வேண்டும்- ராமதாஸ்

 

கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியது என அரசு அறிவித்து பொதுமக்களுக்கு கொரோனா குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 

தொற்றின் வேகம் இரட்டிப்பாக அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர முழு ஊரடங்கு, வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் மூடல் மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க அத்தியாவசிய சேவைகளுக்குக் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  மதுக்கடைகள் அத்தியாவசியம் இல்லை. ஆனால், கட்டுப்பாடுகள் இன்றி அவை செயல்படுகின்றன. அவை உடனடியாக மூடப்பட வேண்டும்! மது குடிப்பகங்கள் தான் கொரோனா பரவல் மையங்களாக திகழ்கின்றன. ஆனாலும்  அவை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை குடிப்பகங்களையும் மூடுவதற்கு  தமிழக அரசு ஆணையிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.