ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி - தமிழ்நாட்டில் 5 முனை போட்டி
Mar 20, 2026, 19:56 IST
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்துள்ளதாக இருவரும் அதிகாரம் பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல் முதலாக 5 முனை போட்டி உருவாக்கி உள்ளது. சசிகலாவின் அஇபுதமமுக கட்சியும், மருத்துவர் ராமதாஸும் புதிய கூட்டணியை அமைத்துள்ளனர். சசிகலாவிற்கு தென்னந்தோப்பு சின்னம் உள்ளது. மருத்துவர் ராமதாஸ் மாம்பழம் சின்னம் தன்னுடையது என சொன்னாலும் தேர்தல் ஆணையம் அதை கொடுக்கவில்லை.
தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்த கூட்டணி செயல்படும் என இருவரும் சேர்ந்து கூட்டாக அறிவித்துள்ளார்.