×

“அப்பாவின் மன உளைச்சலுக்கு முழுக்க முழுக்க காரணம் அன்புமணி தான்”- ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பேட்டி

 

ராமதாசின் மன உளைச்சலுக்கு காரணம் முழுக்க அன்புமணி தான். ராமதாசை தனிமை படுத்த வேண்டுமென அன்புமணி திட்டமிட்டு செய்திருப்பதாகவும் கட்சியை பிடிங்கி சுகபோகமாக இருக்கிற அன்புமணி நல்ல பிள்ளை இல்லை என ஸ்ரீகாந்தி கூறியுள்ளார். 

தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, “ராமதாஸ் யார் சொல்வதையும் கேட்க மாட்டார், அவர் நினைப்பதை தான் செய்வார்,துரோகி துரோகி என்று கூறும் அன்புமணி தான் முதல் துரோகி. பாமக கட்சியில் அனுபவித்தது எல்லாமே அன்புமணி தான். கஷ்டமான காலத்தில் என் தந்தையான ராமதாஸ்- தாய் சரஸ்வதி உடன் நாங்கள் மட்டுமே இருக்கிறோம், என் தந்தை 60 வது கல்யாண நாளுக்கும், பிறந்த நாளுக்கும் கூட வரவில்லை. ராமதாஸ்  உடல் நலம் பாதிக்கபட்டபோது 30 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருந்தார்கள். அப்ப கூட வந்து ராமதாசை பார்க்கவில்லை. என் தந்தைக்கு எதாவது நடந்து விட்டால்  தொலைச்சி விடுவேன் என அன்புமணி தெரிவிக்கிறார். அந்த வார்த்தையை சொல்ல... அவருக்கு தகுதி இல்லை. பதவி, பணத்திற்கு நாங்கள் இல்லை. என் பெற்றோர், சந்தோஷமாக இருக்க வேண்டும். ராமதாசின் மன உளைச்சலுக்கு காரணம் முழுக்க அன்புமணி தான் காரணம். ராமதாசை தனிமை படுத்த வேண்டுமென அன்புமணி திட்டமிட்டு செய்திருக்கிறார். கட்சியை பிடிங்கி சுகபோகமாக இருக்கிற அன்புமணி நல்ல பிள்ளை இல்லை” என்றார்.