×

கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்.. கட்சியினர் சோகம்..!

 

பாமக பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. நா தழுதழுக்க பேசிய அவர், 'அன்புமணிக்கு காலம் பதில் சொல்லும். அன்புமணியை படிக்க வைத்தேன். அமைச்சராக்கினேன். ஆனால் சின்னச்சின்ன பையன்களை வைத்து என்னை அசிங்கப்படுத்துகிறார். அன்புமணி நினைப்பால் தூக்கம் கெடுகிறது. தூக்க மாத்திரை சாப்பிட்டும் தூக்கம் வரவில்லை' என்று பேசினார்.

அன்புமணியின் செயல்பாடுகள் தன்னை மார்பிலும் முதுகிலும் குத்துவது போல் உள்ளதாக அவர் உருக்கமாக தெரிவித்தார்."நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை; சரியாக வளர்த்திருந்தால் அவர் இன்று என்னை இப்படி தூற்றமாட்டாரார். ஒரு தந்தையாக அவருக்கு தேவையான அனைத்தையும் செய்தேன், ஆனால் அவர் என்னை துரோகத்தால் அவமானப்படுத்துகிறார். வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் அமையும் வெற்றி கூட்டணி, அன்புமணிக்கு சரியான பாடத்தை புகட்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். நான் அறிவிக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும். நான் நினைப்பது நிச்சயமாக நடக்கும் சூழல் இந்த நேரத்தில் வந்திருக்கிறது" என கூறியுள்ளார்.