×

பிரதமர் மோடிக்கு இன்று பிறந்த நாள் - ராமதாஸ், அன்புமணி வாழ்த்து

 

பிரதமர் மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர் அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்; நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.