ராமதாஸ்- அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்
கள்ளக்குறிச்சியில் ராமதாஸ்- அன்புமணி ஆதரவாளர்கள் மோதல் ஏற்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சந்தப்பேட்டையில் அன்புமணி அணி மாவட்டச் செயலாளர் செழியனின் பெட்ரோல் பங்க்கிற்கு ராமதாஸ் அணி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் டீசல் போட்டு விட்டு பணம் தராமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து செழியன் கேட்க வந்தபோது ராஜ்குமாருடன் கைகலப்பு ஏற்பட்டது. இது பெரும் மோதலாக மாறி ராமதாஸ்- அன்புமணி ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது விழுப்புரத்தில் நாளை நடக்கும் அன்புமணி போராட்டத்திற்கு வருமாறு ராமதாஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்புமணி நடத்தும் போராட்டத்திற்கு தங்களை எப்படி அழைக்கலாம் எனக் கேட்டு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால் போலீசார் சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.