×

ராமதாஸ் - அன்புமணி திடீர் சந்திப்பு... 45 நிமிடம் நடந்தது என்ன?

 

பாட்டாளி மக்கள் கட்சியின் 38- ஆவது ஆண்டு விழா வருகிற ஜூலை 16- ஆம் தேதி ( வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை, அவரது மகனும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி, அடுத்த கட்ட நடவடிக்கை, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை தொடர்பாகவும் இருவரும் தீவிர ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாசை, கட்சியின் தலைவர் அன்புமணி திடீரென சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த கட்சியை சேர்ந்தவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி தலைமையில் இரு குழுவாக பிரிந்து செயல்பட தொடங்கினர். அதன்படி, அன்புமணி பாஜக கூட்டணியிலும், ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் தனி கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்தித்தனர். இதில், அன்புமணி தலைமையிலான பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ராமதாஸ், சசிகலா கூட்டணி போட்டியிட்ட எந்த தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை பெறவில்லை.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாசை, அவரது மகன் அன்புமணி திடீரென சந்தித்திருந்தார். இந்த இந்த சந்திப்பு அந்த கட்சியினர் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் திடீரென சந்தித்துள்ளார். இது அந்த கட்சியின் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.