ராமதாஸ், ஓபிஎஸ் உடன் கூட்டணி?- தவெக மறுப்பு
Jan 28, 2026, 17:15 IST
பாமக நிறுவனர் ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
null
null
null
இதுதொடர்பாக தவெக துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தை பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு படுத்தி, கூட்டணி குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கழகத்தின் நிலைப்பாடு மற்றும் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை, இத்தகைய வதந்திகளைப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.