தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜாம்பவானாகத் திகழ்ந்த ராமச்சந்திர ஆதித்தனார் - தினகரன் புகழாரம்
மாலைமுரசு அதிபர் மறைந்த பா.ராமசந்திர ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மக்களிடையே அன்றாட செய்திகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திய மாலைமுரசு அதிபர் மறைந்த பா.ராமசந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள் இன்று.
தமிழர் தந்தை என போற்றப்படும் ஆதித்தனார் அவர்களின் வழியில் தமிழ் இன உணர்வு கொண்டவராகத் திகழ்ந்து, தமிழர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் மாலைமுரசு நாளிதழ் மூலம் தமது இதழியலை முன்னெடுத்தவர் பா.ராமசந்திர ஆதித்தனார் அவர்கள்.
தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜாம்பவானாகத் திகழ்ந்த ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளில் அவரது தமிழ் இனப்பற்று, மொழிப்பற்று, ஆகியவற்றை நினைவுகூர்ந்து போற்றிடுவோம். " என்று குறிப்பிட்டுள்ளார்.