"ரகா ரங்கராஜ் எனது மகனே!" – டி.என்.ஏ முடிவுக்குப் பின் குழந்தையை ஏற்றுக்கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ்..!
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்தது. இந்த நிலையில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக்கிவிட்டு கைவிட்டுவிட்டதாகவும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்
இதனிடையே, ஜாய் கிரிசில்டாவிற்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ரகா ரங்கராஜ் என அவர் பெயரிட்டார். ஆனால்,அந்தக் குழந்தை என்னுடையது அல்ல; மிரட்டி திருமணம் செய்து பணம் பறிக்கப் பார்க்கிறார். ஒருவேளை டி.என்.ஏ பரிசோதனையில் (DNA Test) அது எனது குழந்தை என நிரூபிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அக்குழந்தையை நானே பராமரிப்பேன் என மாதம்பட்டி ரங்கராஜ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் டி.என்.ஏ சோதனையில் குழந்தைக்கு தந்தை ரங்கராஜ் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு பின் என்ன நடந்தது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் ஜாய் கிரிசில்டாவிடம் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு அவர் தற்போது ஒரு புதிய அப்டேட்டைத் தந்துள்ளார்.
அதில், டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்று கேட்பவர்களுக்கு இப்போது ஒரு அப்டேட் சொல்கிறேன். மாதம்பட்டி ரங்கராஜ் எங்களது மகன் ரகா ரங்கராஜை தனது சொந்த மகனாக முழுமையாக ஏற்றுக்கொண்டார். மேலும், வாழ்நாள் முழுவதும் அவன் கூடவே இருப்பேன் என்றும், தனது மகனை ஒருபோதும் விட்டுச் செல்ல மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இனிமேல் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று ஜாய் கிரிசில்டா மிகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.