×

மாநிலங்களவை எம்.பி.க்கள் ஜூலை 25ல் பதவியேற்பு

 

மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றி வெற்றி பெற்ற 6 பேர் ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்கின்றனர். 

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது உறுப்பினர்களாக உள்ள அன்புமணி ராமதாஸ், மு.சண்முகம், என்.சந்திரசேகரன், மு. முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ ஆகியார் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழக சட்டப்பேரவையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்டு மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 17 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள், எம்எல்ஏக்கள் முன்மொழிவு இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டன. எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் போட்டியிட்ட நிலையில், அவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 

இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றி வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கமல்ஹாசன், அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் வரும் 25ம் தேதி எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொள்கின்றனர்.