“CM கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி” - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
கலை பண்பாட்டுத் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், “முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களிலும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள்/ஆடை, அணிகலன்கள் வாங்குவதற்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 10,000 நிதியுதவி அதிகபட்சமாக ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டம் மேலும் 500 இளம் கலைஞர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். கலை பண்பாட்டுத் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
23 மாவட்டங்களில் தற்போது செயல்பட்டு வரும் அருங்காட்சியகங்கள் மேலும் 15 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதன் முதற்கட்டமாக, 4 மாவட்டங்களுக்கு (நாமக்கல், திருவள்ளுர், கன்னியாகுமரி, அரியலூர்) விரிவுப்படுத்த ஏதுவாக, விரிவான திட்ட அறிக்கை (DPR) ரூ.80 மதிப்பீட்டில் தயாரிக்கப்படும். கடந்த ஆட்சியின் சிறந்த திட்டங்களை மேலும் விரிவுபடுத்துகிறோம். கலை மரபு மாறாமல் மேம்படுத்த ரூ.2 கோடியில் கலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கான மாதாந்திர நிதியுதவி மேலும் 1500 பேருக்கு விரிவுப்படுத்தப்படும். மதுரையில் தமிழர் நாகரிக அருங்காட்சியகம் அமைப்பது குறித்து ரூ.2 கோடியில் ்்திட்ட அறிக்கை வெளியிடப்படும்” என்றார்.