யார் இந்த நிவேதா பால்ராஜ்? நிவேதா அன்பழகன், நிவேதா பால்ராஜ், சச்சின் பெயரில் போலி புத்தகங்கள் - ராஜ்மோகன்
கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்கள் என்ற பெயரில் 500 -க்கும் மேற்பட்ட குப்பைகள் உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
சென்னை கன்னிமாரா நூலகத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழகத்தில் 4000 நூலகங்கள் உள்ளன. அனைத்து நூலகங்களிலும் ஆய்வு செய்யப்படும். முதல்வர் படைப்பகத்திலும் விசாரனை மேற்கொள்ளப்படும். கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்கள் என்ற பெயரில் 500 -க்கும் மேற்பட்ட குப்பைகள் உள்ளன. 523 போலி நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நூலகத் துறையில் கடந்த பல ஆண்டுகளாக ஊழல் நடந்துள்ளது. நூலாக ஏஐ ஊழலால் சர்வதேச தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. புதிதாக திறக்க தயாராக உள்ள நூலகங்களின் புத்தக ஆர்டர்களை ரத்து செய்யப்போகிறோம். குழந்தைகள், மாணவர்கள் விஷயத்தில் முதல்வர் கவனமாக இருக்கிறார். விசாரணை நேர்மையாக நடக்கும்.
புத்தகக் கொள்முதல் ஊழல் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தப்படும். பீனிக்ஸ் பதிப்பகம் குறித்தும் விசாரிக்கப்படும். ஊழலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன். ஒருவரும் தப்பிக்க முடியாது. முன்பு கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து புத்தகங்களும் ரத்து செய்யப்படும். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும். பீனிக்ஸ் புத்தகங்கள் குறித்து விசாரிக்கப்படும். அகல் விளக்கு பதிப்பகம் பற்றி பபாசிகக்கு கூட தெரியவில்லை. பெரியார் பெயரை வைத்து மோசடி நடந்துள்ளது. ஆசிரியர் பெயர் விஜய் என்பதாலேயே தவெக ஆட்சியில்புத்தகம் வாங்கப்பட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் போலி புத்தகங்கள் எல்லாம் திமுக ஆட்சி காலத்திலேயே வாங்கப்பட்டவை. ஸ்காட்லாந்து போலீசாரால் கூட போலி எழுத்தாளர்களை கண்டுபிடிக்க முடியாது. அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கொடுத்த அனைத்து ஆர்டர்களையும் ரத்து செய்கிறோம். யார் இந்த நிவேதா பால்ராஜ்..? நிவேதா மோகன், நிவேதா அன்பழகன், நிவேதா பால்ராஜ், சச்சின் ஆகியோரது பெயரிலும் கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்கள் உள்ளன. கமலாம்பாள் கருணாநிதி, பவுனம்மாள் கருணாநிதி என, இல்லாத எழுத்தாளர்கள் பெயர்களில் ஏஐ மூலம் புத்தகம் எழுதி திமுக ஆட்சியில் மோசடி நடந்துள்ளது" என்றார்.