ரஜினியின் மேஷ் அப் வீடியோவால் எழுந்த சர்ச்சை - கொதிப்பில் தவெக-வினர்..!
அம்பத்தூர் முருகன் சினிமாஸில் திரையிடப்பட்ட ரஜினியின் மேஷ் அப் வீடியோ சர்ச்சையாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் திரைப்படத்திற்கு முன்பாக சிறப்பு வீடியோக்கள் மற்றும் மேஷப் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை அம்பத்தூரில் உள்ள முருகன் சினிமாஸ் திரையரங்கில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பு முதல்வர் விஜயை அவமதிக்கும் விதமாக மேஷ் அப் திரையிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
முருகன் சினிமாஸில் ‘ஜெயிலர் 2’ படத்திற்கு முன்பாக திரையிடப்பட்ட மேஷப் வீடியோவில் நடிகர் விஜய், ரஜினிகாந்தின் காலில் விழுந்த பழைய வீடியோ காட்சி ஒன்றை திரையிட்டுள்ளது. இத்துடன் 'உங்கப்பன் விசில கேட்டவன்' என்கிற ஜெயிலர் பாடலுக்கு இணையாக விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் ரஜினியின் காலை தொடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
விஜய் ரசிகர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலைய்ல் முருகன் சினிமாஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது "தவறான மேஷப் வீடியோவைத் திரையிட்டதற்காக நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது திட்டமிட்டு நடந்த தவறு அல்ல. இதனால் எங்கள் பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும், ஏமாற்றத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தத் தவறுக்கு நாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம். அந்த மேஷப் வீடியோவை தற்போது நீக்கிவிட்டோம்." என்று முருகன் சினிமாஸ் தெரிவித்துள்ளது.
APOLOGY NOTE We sincerely apologize for screening the wrong mashup. This was an unintentional mistake, and we deeply regret the inconvenience caused and the disappointment it may have brought to our audience. We take full responsibility for this error we have removed mashup
— MURUGAN CINEMAS (@MURUGANCINEMAS1) October 19, 2026
null
@MURUGANCINEMAS1 Ambattur this is highly inappropriate and disappointing. Please remove this Mashup video from the screening immediately and ensure this does not happen again. Kindly take this complaint seriously. #MuruganCinemas #Ambattur https://t.co/tStpdQIvLB
— Sanjeev (@SanjeevNandha) October 18, 2026