“நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது”- ரஜினிகாந்த்
Feb 25, 2026, 16:21 IST
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி ஐயா நல்லகண்ணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். திருநெல்வேலி விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு, இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர்.
இந்நிலையில் நல்லகண்ணு அய்யாவின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.