×

"பிரதமர் மோடி ஒரு போராளி" - ரஜினிகாந்த்

 

மும்பையில் நடந்த சர்வதேச ஒலி, ஒளி உச்சி மாநாட்டில்  நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றினார்.

அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், “பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி. ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் மோடி ஒரு போராளி. அவர் எந்த சவாலையும் சந்திப்பார். கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடியை திறமையை கண்டு வருகிறோம். காஷ்மீர் நிலைமையை பிரதமர் மோடி தைரியமாகவும், அழகாகவும் கையாள்வார். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது, இரக்கமற்ற செயல்.

தனது வாழ்வில் பல்வேறு சவால்களை திறம்பட, தொலைநோக்கோடு எதிர்கொண்டு வெற்றி பெற்ற போராளி பிரதமர் மோடி. உள்நாட்டு பிரச்னைகள் மட்டுமல்லாமல் சர்வதேச பிரச்னைகளையும் திறம்பட சமாளித்தவர். எந்தப் பிரச்னையையும் மன உறுதியுடன் எதிர்கொண்டு போராடி வெல்லும் பிரதமர் மோடி, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.