இசையமைப்பாளர் தேவா உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!
இசையமைப்பாளர் தேவா இன்று காலை சென்னையில் உள்ள சூர்யா மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தேவாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
1989ஆம் ஆண்டு ’மாட்டுக்கார மகராசா’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா, அண்ணாமலை, பாட்ஷா, குஷி, நேருக்கு நேர், மின்சார கண்ணா, ஆசை, காதல் கோட்டை என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் தமிழ் சினிமாவின் மாநில விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த இசையமைப்பாளர் தேவா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார் #Rajinikanth | #RIPDeva | #Deva | #MusicDirector https://t.co/t7ffL0Sibz
— PttvOnlinenews (@PttvNewsX) October 17, 2026
மறைந்த இசையமைப்பாளர் தேவா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார் #Rajinikanth | #RIPDeva | #Deva | #MusicDirector https://t.co/t7ffL0Sibz
— PttvOnlinenews (@PttvNewsX) October 17, 2026