ஹெச். ராஜாவை நலம் விசாரித்த ரஜினிகாந்த்
Feb 2, 2026, 19:31 IST
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹெச். ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா அவர்கள் ஜனவரி 30 ஆம் தேதி நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது உயிருக்கு ஆபத்தான முறையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவருடன் இருந்த பாஜக தலைவர்களும், அங்கிருந்த அனைத்துக் கட்சி நண்பர்களும், என் டி டிவி ஊடக நிறுவனத்தினரும், ஓட்டல் நிர்வாகத்தினரும் அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹெச். ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்