×

“எந்த எண்ணத்தில் ரஜினி பற்றி பேசினீர்கள் என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும் ஆதவ்?”- தவெக மேடையில் ஏறி மிரட்டிய ரஜினி ரசிகர்

 

“நீங்கள் எந்த எண்ணத்தில் ரஜினி பற்றி பேசினீர்கள் என்று எனக்குத் தெரிந்தாக வேண்டும் ஆதவ்?” என தவெக கூட்டத்தில் தவெக உறுப்பினரும், ரஜினி மன்ற முன்னாள் செயலாளருமான அசோக் ஆதவ்விடம் கேள்வி எழுப்பினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர்  ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து மன வலிமை இல்லாதவர். ஆகையால் தான் திமுக மிரட்டலால் அவர் கட்சி ஆரம்பிக்காமல் சென்று விட்டார் என தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தவெக உறுப்பினரும், ரஜினி மன்ற முன்னாள் செயலாளருமான அசோக், “45 வருடமாக நான் ரஜினியின் ரசிகர். ரஜினி சார் அற்புதமான மனிதர். போராட்ட குணமுடையவர். பயந்தாங்கோலி. நிறைய பேரை எதிர்த்து குரல் கொடுத்த மனிதர். அப்படிப்பட்ட தைரியமானவரை நீங்கள் பார்க்கவே முடியாது. ஆதவ் அர்ஜூனன் சாரிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைக்கிறேன். நான் கூட இருந்தேன். ஆதலால் எனக்கு தெரியும். நீங்க எந்த எண்ணத்தில் பேசினீர்கள் என எனக்கு தெரியும். ஆனால் பப்ளிக்கா... நீங்க எந்த எண்ணத்தில் பேசினீர்கள் என சொல்ல வேண்டும்! உலகத்தில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் சொல்றேன்.. ரஜினி சாரை பற்றி யார் எது பேசினாலும், உங்க சார்பாக நான் கேள்வி கேட்பேன்” என்றார்.


ரஜினி நற்பணி மன்றத்தின் தி.நகர் மாவட்ட செயலாளராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அசோக், 21 பிப்ரவரி 2026-ல் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்தார். இவர் ரஜினியின் தீவிர ஆதரவாளராக இருந்து, பின்னர் தவெகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடதக்கது.