×

விஜயகாந்தின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார் நடிகர் ரஜினிகாந்த்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் உடல்நிலை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்ததாக எஸ்.கே சுதீஷ் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவரான விஜயகாந்த் கடந்த 22ம் தேதி வழக்கமான சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த்க்கு கொரோனா அறிகுறி சரி செய்யப்பட்டு விட்டதாக
 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் உடல்நிலை பற்றி நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்ததாக எஸ்.கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரான விஜயகாந்த் கடந்த 22ம் தேதி வழக்கமான சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த்க்கு கொரோனா அறிகுறி சரி செய்யப்பட்டு விட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மியாட் மருத்துவமனை, தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைவார் என எதிர்பார்ப்பதாகவும் விளக்கம் அளித்தது. இதனிடையே விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விஜய்காந்த்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக எஸ்.கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.