×

ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான் ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

உடல்நிலை சரியில்லை என்ற தகவல் உண்மைதான்; அரசியல் நிலைப்பாட்டை கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்பேன் என ரஜினி விளக்கமளித்த நிலையில் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசியளவில் ட்ரெண்டாகிவருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை ராகவேந்தர் திருமண மண்டபத்தில் ரசிகர் முன்பு பேசிய ரஜினி‘தான் நிச்சயம் கட்சி ஆரம்பிப்பது உறுதி. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிப்போம்’ எனக் கூறினார். இதனால் ரசிகர்கள் உற்சாகமாக வேலைகளைப் பார்த்தனர். ஆனால் இன்றுவரை அவர்
 

உடல்நிலை சரியில்லை என்ற தகவல் உண்மைதான்; அரசியல் நிலைப்பாட்டை கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்பேன் என ரஜினி விளக்கமளித்த நிலையில் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசியளவில் ட்ரெண்டாகிவருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை ராகவேந்தர் திருமண மண்டபத்தில் ரசிகர் முன்பு பேசிய ரஜினி‘தான் நிச்சயம் கட்சி ஆரம்பிப்பது உறுதி. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிப்போம்’ எனக் கூறினார். இதனால் ரசிகர்கள் உற்சாகமாக வேலைகளைப் பார்த்தனர். ஆனால் இன்றுவரை அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்த சூழலில் தான் கடந்த 2 தினங்களுக்கு முன் ரஜினி எழுதிய கடிதம் என ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பரவியது. அக்கடிதத்தில், “சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கும் ரஜினியால் கொரோனா தொற்று பரவிகொண்டிருக்கும் இந்தச் சூழலில் கட்சி தொடங்க முடியாது. அதனால் டிசம்பரில் நான் என்னவிதமான முடிவை அறிவித்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள்’ என இருந்தது. அக்கடிதம் உண்மையா… போலியா என்ற விவாதம் கிளம்பியது.

இதுகுறித்து இன்று காலை ட்விட்டரில் விளக்கமளித்த ரஜினி, ‘அந்தக் கடிதம் நான் வெளியிட்டதல்ல.. ஆனால், அதில் குறிப்பிட்டிருக்கும் என் உடல்நிலை குறித்த தகவல்கள் உண்மைதான்’ என்று கூறியிருக்கிறார்.

இதனை பார்த்ததும் அனைவரும் படையப்பா படத்தில் வரும் காமெடிதான் நினைவுக்கு வந்தது. அதாவது ‘மாப்ள அவருதான் ஆனா அவர் போட்டுருந்த சட்ட என்னோடது’ என்ற டையலாக், ரஜினியின் ட்வீட் உடன் ஒத்துப்போனது.

ரஜினியின் ட்விட்டர் பதிவிலிருந்து அவர் அரசியலிலிருந்து பின்வாங்குவதும், அவருக்கு தற்போதைக்கு அரசியலில் குதிக்க நாட்டம் இல்லை என்பதும் தெளிவாக தெரிந்தது. இந்நிலையில் ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான் என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஹேஷ்டேக்கில் ரசிகர்களை பதிவுகளையும் மீம்களையும் பதிவிட்டுவருகின்றனர். ரஜினிக்கு அரசியலுக்கு வர விருப்பம் இல்லை என்றாலும் ரசிகர்கள் விடமாட்டார்கள் போல..