×

துப்பாக்கிச்சூடு வழக்கு : ரஜினிக்கு பதில் வழக்கறிஞர் ஆஜர்!

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அதன் பிறகு பேசிய அவர், இந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என்று மறைமுகமாக சாடினார். ரஜினியின் இந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்த வழக்கை விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம், அவருக்கு கடந்த பிப். மாதம்
 

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அதன் பிறகு பேசிய அவர், இந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என்று மறைமுகமாக சாடினார். ரஜினியின் இந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்த வழக்கை விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம், அவருக்கு கடந்த பிப். மாதம் சம்மன் அனுப்பியது.

அதன் படி, நேரில் ஆஜரான ரஜினி தான் அவ்வாறு கூறியதற்காக காரணத்தை விளக்கினார். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் அருணா ஜெகதீசன் ஆணையம் மீண்டும் ரஜினிக்கு சம்மன் அனுப்பியது. துப்பாக்கிச்சூடு வழக்கில் ரஜினி உட்பட 56 பேரிடம் 24ஆவது கட்ட விசாரணை நடத்தப்பட உள்ளதால் ஜன.19ம் தேதி ஆஜராகுமாறு சம்மனில் தெரிவித்திருந்தது. உடல்நிலை காரணமாக அரசியல் பயணத்தில் இருந்து பின்வாங்கிய ரஜினி, இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவாரா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணைக்கு ரஜினிக்கு பதில் அவரது வழக்கறிஞர் ஆஜராகியிருக்கிறார். ரஜினி ஆஜராக முடியாதது குறித்து வழக்கறிஞர் விசாரணை ஆணையத்திடம் விளக்கமளித்து வருவதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.