#BREAKING நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்
தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமன்ம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு பணியில் இருந்து அண்மையில் மாநில அரசின் பணிக்கு திரும்பினார் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி. இவர் தற்போது நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள இப்பதவிக்கு, தலைமைச் செயலாளர் கேடர் பதவிக்கு இணையான அந்தஸ்தும் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, ராஜேஷ் லக்கானி அந்தத் துறையின் செயலாளராகப் பணியாற்றியவர் ஆவார். மத்திய அரசுப் பணியில் இருந்த அவர், தற்போது மீண்டும் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.செந்தில் பாலாஜி மீது எழுந்துள்ள டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் முழுமையான பின்னணி ராஜேஷ் லக்கானிக்கு அத்துப்படியாகத் தெரியும் எனக் கூறப்படுகிறது.அவரிடமிருந்து முழுமையான தகவல்களைப் பெற்று, வழக்கினை மேலும் பலப்படுத்திச் செந்தில் பாலாஜியை இறுக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.