×

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து : அவசர உதவி எண்கள் அறிவிப்பு

 

அசாம் மாநிலத்தின் சாய்ராங் நகரில் இருந்து புது தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20507) அசாமின் நாகான் மாவட்டம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​யானைக் கூட்டம் ஒன்று ரயில் பாதையைக் கடக்க முயற்சித்துள்ளது. ரயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தியபோதும், ரயிலை முழுமையாக நிறுத்த முடியவில்லை. இதனால் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் கூட்டத்தின் மீது மோதியதில், 8 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. யானைகள் மீது மோதியதன் விளைவாக, ரயிலின் இஞ்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்து அதிகாலை 2 மணியளவில் ஹோஜாய் மாவட்டத்தின் சாங்ஜுராய் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் பயணித்தோர், பாதிக்கப்படாத பெட்டிகளில் காலியாக இருந்த இருக்கைகளுக்கு மாற்றப்பட்டார்கள். தடம் புரண்ட பெட்டிகள் பிரிக்கப்பட்டு, ரயில் கௌகாத்தி நோக்கி புறப்பட்டது.

கௌகாத்தியில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, ரயில் டெல்லி நோக்கி சீராக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக வடக்கு மற்றும் வடகிழக்கு அசாமின் ரயில் போக்குவரத்தை பாதித்துள்ளது.

 விபத்து நடந்த பகுதி, வழக்கமான யானைகள் நடமாடும் பகுதி இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து, பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு உதவுவதற்காக கௌகாத்தி ரயில் நிலையத்தில் அவசர உதவி எண்கள் செயல்படுத்தப்பட்டன. உதவி எண்கள்: 0361-2731621, 0361-2731622, 0361-2731623 ஆகும்.