×

“தனியாக நிற்கும் விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது”- ராஜகண்ணப்பன்
 

 

யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தி, கூட்டத்தை கூட்டலாம், ஆனால் அதில் பங்கேற்கும் சிறுவர்களால் ஓட்டு போட முடியாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக தனது பிரச்சாரத்தை வருகின்ற 13ம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தி, கூட்டத்தை கூட்டலாம், ஆனால் அதில் பங்கேற்கும் சிறுவர்களால் ஓட்டு போட முடியாது. தனியாக நிற்கும் விஜய் தேர்தலில் வந்து ஒன்றும் செய்ய முடியாது.  திடீரென வந்து அரசியல் செய்வது சாதாணமல்ல” எனக் கூறினார்.