ராஜாஜி அவர்கள் நினைவைப் போற்றி வணங்குகிறோம் - அண்ணாமலை ட்வீட்
Dec 25, 2023, 13:58 IST
மறைந்த முன்னாள் முதல்வர் ராஜகோபாலாச்சாரியாரின் நினைவு தினத்தையொட்டி அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "சுதந்திரப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராகவும், சென்னை மாகாணத்தின் முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளில் திறம்பட மக்கள் பணி செய்தவருமான, பாரத ரத்னா, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் நினைவு தினம் இன்று.
மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம் என, தமது இறுதிக் காலம் வரை சமூகத்திற்காகவும், மக்களுக்காக உழைத்த அமரர் ராஜாஜி அவர்கள் நினைவைப் போற்றி வணங்குகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.