☰
×

"ஜெயலலிதாவை போன்று ஒரு ஆளுமை திரிஷாவுக்கு உள்ளது"- ராஜகோபால்

 

"ஜெயலலிதாவிடம் இருந்த அதே ஆளுமைத் திறனுடன் திரிஷா உள்ளார். அவர் அரசியலில் பயணித்தால், மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என `திரிஷா பேரவை'யின் நிறுவனர் ராஜகோபால் கூறியுள்ளார்.

நடிகை திரிஷாவின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, ‘இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’ என்ற பெயரில் திருநெல்வேலியில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளனர். நடிகை திரிஷாவிற்கு ஆதரவாகவும், அவரது பெயரில் நற்பணிகளை முன்னெடுக்கும் நோக்கிலும் இந்தப் பேரவை தொடங்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  ராஜகோபால் என்பவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு பேரவை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான இலட்சினையும் வெளியிடப்பட்டுள்ளது. பதவிக்காக அல்ல.. தமிழக மக்களின் உரிமைக்காக என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜகோபால், "பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட உள்ளோம். அரசியலில் முதலமைச்சர் விஜய் உடன் சேர்ந்து  திரிஷா பயணம் செய்தால் மக்களுக்கு நல்லது.  திரிஷா அரசியலுக்கு வர வேண்டும். வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் தொடங்கி இருக்கோம். தமிழகத்துக்கு ஜெயலலிதா போன்று ஒரு ஆளுமை தேவைப்படுகிறது. விஜய் தலைமையிலான தவெக அரசு மிக சிறப்பாக செயல்படுகிறது. இருந்தாலும் விஜய்யுடன் இணைந்து திரிஷாவும் அரசியலில் பயணித்தால் ஜெயலலிதா ஆட்சியை போன்று ஒரு ஆட்சி நமக்குக் கிடைக்கும். ஜெயலலிதாவை போன்று ஒரு ஆளுமை திரிஷாவுக்கு உள்ளது என்பது அவருடன் பழக்கியவர்களுக்கு தெரியும். அதனால் அவர் அரசியலில் பயணித்தால், தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். ஜெயலலிதாவின் வழித்தோன்றலாகவே அவரை நாங்கள் பார்க்கிறோம். அதன் காரணமாகவே இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவையை தொடங்கியுள்ளோம்" என்றார்