×

 குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கான வயது வரம்பு 35லிருந்து 40 ஆக உயர்வு

 

இரண்டு பெண் குழந்தை பெற்றதற்கு பின்பாக குடும்ப கட்டுபாடு செய்வதற்கான வயது வரம்பை 35 லிருந்து 40 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும்போது தாயாரின் வயது 35 ஐ கடந்துவிடும் நிலை உள்ளது. இதன்காரணமாகவும் இத்திட்டத்தில் பயனடையும் பயனாளிகள் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்துவருகிறது. இது தொடர்பான சமூக நல இயக்குநரின் கருத்துருவை கவனமாக பரிசீலனை செய்து முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுள் ஒன்றான பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் இருக்க வேண்டும் என்பதில் உள்ள அந்த வயது வரம்பினை 35 லிருந்து 40  உயரத்தி அரசு ஆணையிடுகிறது. 

முதலமைச்சரின் பெண், குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கென நடப்பாண்டில் செய்யப்பட்டுள்ள நிதியொதுக்கம் ரூ.100 கோடிக்குள் செலவினம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சமூக நல இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.