"26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை''- வானிலை மையம்
Oct 22, 2025, 17:29 IST
தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், தி.மலை, விருதுநகரில் இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.