×

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. இதேபோல் சென்னை பெருநகர் மற்றும் புறநகரின் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.