செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. மற்ற இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் மழை பெய்யலாம். தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் குளிர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த பட்ச வெப்பநிலை இயல்பு வெப்பநிலையை விட குறையக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டஙளில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.