ஓடும் வாகனங்கள் மீது விழுந்த ரயில்வே கேட்... நூலிழையில் உயிர் தப்பிய மக்கள்! அதிரவைக்கும் காணொலி
Nov 26, 2025, 15:15 IST
கோவையில் ரயில்வே கிராசிங்கில் கடந்து கொண்டு இருந்த வாகனங்கள் மீது ரயில்வே கேட் திடீரென விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான ரயில்கள் வந்து செல்கின்றன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் நெரிசயின்றி வாகன ஓட்டிகள் கடந்து செல்வதற்கு, பல்வேறு பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் உள்ளது. ஒரு சில இடங்களில் குறைந்த வாகனங்கள் கடந்து செல்லும் பகுதிகளில் ரயில்வே கேட் செயல்பட்டு கொண்டு வருகிறது.