#JUST IN : அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப்பதிவு..!!
திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மகேஷ். அப்போதை ஆட்சியில் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல் பணிகளுக்கு 100 கோடி ரூபாய் வரை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான புகாரில் திமுக நிர்வாகி அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டசபையில் மகேஷ் மீது நிதியமைச்சர் மரியவில்சன் லஞ்சப்புகார் கூறியிருந்தார். இந்நிலையில், திருச்சி, தென்னூரில் உள்ள முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை உட்பட 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள அரசகுமாருடன் தொடர்பு என்ற புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சோதனை குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட தகவலில், திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அங்கீகாரம், தர உயர்வு, டி.டி.சி.பி. அனுமதி பெற்றுத்தருவதாக கூறி திமுக ஆட்சியில் ரூ.100 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. பிடி அரசகுமார் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் சோதனை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் அலுவலக பூட்டை உடைக்க மத்திய குற்றப்பிரிவு முடிவு செய்துள்ளது. சோதனைக்கு போலீசார் வந்த நிலையில் பூட்டப்பட்டுள்ளதால் அலுவலகம் முன்பு காத்திருக்கின்றனர்.