முதல்வர் விஜய்யை சந்திக்கும் ராகுல்
நாளை சென்னைக்கு வரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசுகிறார்.
தவெக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும். தவெக ஆட்சி கவிழும் என்று கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் ஒரு பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. ராகுல் மற்றும் விஜயின் நட்பு வலுவாவதை காட்டும் விதமாக நாளை சென்னைக்கு வரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசுகிறார். சென்னை வரும் ராகுல் காந்தியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வரவேற்று விஜய் வீட்டிற்கு அழைத்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் வீட்டில்தான் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. மதிய உணவின்போது சந்திப்பு நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.