×

“ஒன்றிணைந்து போராடுவோம்..” - ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி நன்றி

 

ஜனநாயகத்தின் ஆன்மாவை பாதுகாக்க ஒன்றிணைந்து போராடுவோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Thank you, Thiru M.K. Stalin, for your warm wishes.

Our shared resolve to defend the idea of India, our Constitution, and federalism will continue to guide us - this is the fight for the very soul of our democracy, and we will wage it together, until we win. https://t.co/h43cMW6emG

— Rahul Gandhi (@RahulGandhi) June 19, 2026


ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீங்கள் வாழ வாழ்த்துகள்” என்றார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல்காந்டி, “தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.  ஜனநாயகத்தின் ஆன்மாவை காப்பதற்கான போராட்டத்தில் நாம் இணைந்து நின்று, வெற்றி பெறும் வரை நாம் ஒன்றிணைந்து போராடுவோம். இந்தியாவின் ஆன்மா, அரசியலமைப்பு, கூட்டாட்சித் தத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் நாம் கொண்டுள்ள உறுதிப்பாடு நம்மை வழிநடத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.