×

”இன்று ஒரு பேச்சு, நாளை ஒரு பேச்சு என்பது வைகோவிடம் கிடையாது” - ராகுல் காந்தி புகழாரம்

 

'வைகோ இன் பார்லிமென்ட்' புத்தகத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பெற்றுக்கொண்டார்.


டெல்லியில் நடந்த வைகோ குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “வைகோவிடம் மற்ற தலைவர்கள் மாதிரி இல்லாமல் இன்று ஒரு பேச்சு, நாளை ஒரு பேச்சு கிடையாது. அவர் இத்தனை ஆண்டுகள் தனது கொள்கைக்காக வாழ்ந்ததற்காக அவரை வாழ்த்துகிறேன். வைகோ தனது அரசியல் வாழ்வு முழுவதும் கொள்கைகளில் உறுதியாக நின்றவர்.  வைகோ இளமைத் துடிப்புடனும் ஈர்க்கும் ஆளுமையுடனும் திகழ்வது மட்டுமல்லாமல், கூர்மையான அறிவுத்திறனையும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் கொண்டவர். RSS-ன் விருப்பப்படியே பாஜக செயல்படுகிறது. RSS தனது சொந்த வரலாற்றுப் பார்வையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. இதை எதிர்ப்பதில் முன்னணியில் நின்றதற்காக வைகோவுக்கு நன்றி. நமது நாட்டில் ஒரு விசித்திரமான கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். ஒரு புறம் மாணவர்கள் கடுமையான வலியுடன் வீதிகளில் இறங்கியுள்ளனர். மறுபுறம் மாணவர்களை மன்னிக்கும் பிரதமர் இருக்கிறார்” என்றார்.