#BREAKING திமுக எடுத்த இந்த முடிவு ஜனநாயகத்தை சிதைக்கும்- ராகுல்காந்தி
Nov 29, 2026, 18:39 IST
தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு ஆதரவு என்ற திமுக எடுத்த இந்த முடிவு ஜனநாயகத்தை சிதைக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, "தொகுதி மறு வரையறை குறித்த எங்களின் பார்வையை ஸ்டாலினிடம் எடுத்து கூறினோம். தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால் தென் மாநிலங்களையும் பாதிக்கும் என்றோம். தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு ஆதரவு என்ற திமுக எடுத்த இந்த முடிவு ஜனநாயகத்தை சிதைக்கும்.தமிழ் மொழி, கலாச்சாரத்தை ஒழிக்க நினைக்கும் ஆர். எஸ். எஸ். பாஜகவுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது. 850 மக்களவை தொகுதிகளை உருவாக்கி அரசியல் தன்மையை தனக்கு சாதகமாக மாற்ற பாஜக நினைக்கிறது. பாஜகவின் முயற்சி வெற்றி பெற்றால் இந்தியாவில் ஜனானாயாகமே முடிவுக்கு வந்துவிடும்" என்றார்.