ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி
ஆக.1ஆம் தேதி சென்னையில் நடைபெறும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்கிறார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம்தாகூர் எம்பி தனது எக்ஸ் தளத்தில், “ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் எங்கள் அன்புத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது!அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) திரு. கே.சி. வேணுகோபால் அவர்கள் அறிவித்தபடி, ராகுல் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் வருகிறார்.
ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் எங்கள் அன்புத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது!
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) July 26, 2026
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) திரு. கே.சி. வேணுகோபால் அவர்கள் அறிவித்தபடி, ராகுல் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 1 அன்று…
அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தி அவர்களின் இந்த வருகை, தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்.தமிழக மக்கள் சார்பிலும், தமிழக காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2029-ல் ராகுல் காந்தி அவர்களை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.