×

பெரியார் சிலை அவமதிப்பு : கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி தமிழில் ட்வீட்!

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக ஒருவர் போத்தனூர் போலீசில் சரணடைந்தார். சரணடைந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் சிலை மீது அவமதிப்பு
 

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக ஒருவர் போத்தனூர் போலீசில் சரணடைந்தார். சரணடைந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் சிலை மீது அவமதிப்பு விவகாரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், பல அரசியல் தலைவர்கள் பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.