×

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென வேண்டும் என திமுக முனைப்பு காட்டி வரும் நிலையில், இருக்கும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகிறார். திமுக – காங்கிரஸ் கூட்டணிக்காக அவர்
 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென வேண்டும் என திமுக முனைப்பு காட்டி வரும் நிலையில், இருக்கும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகிறார். திமுக – காங்கிரஸ் கூட்டணிக்காக அவர் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு ,கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதனால் இன்று காலை 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் ராகுல்காந்தி 11 மணிக்கு கோவை வந்தடைகிறார். அங்கு தொழில் முனைவோர் உடன் கலந்துரையாடும் அவர் மாலை 3.30 மணி அளவில் திருப்பூர் செல்கிறார். பின்னர் 5 மணி அளவில் திருப்பூர் குமரனின் நினைவிடம் சென்று மலரஞ்சலி செலுத்தும் அவர், 5.45 மணிக்கு தொழில் துறையினருடன் கலந்துரையாடுகிறார். பின்னர் இரவு திருப்பூரில் உள்ள பொதுப்பணித்துறையின் விருந்தினர் மாளிகையில் தங்கும் ராகுல்காந்தி, நாளை காலை ஈரோடு சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

இதைத்தொடர்ந்து 25ஆம் தேதி கரூர் மற்றும் திண்டுக்கல்லில் தேர்தல் பரப்புரை செய்யும் ராகுல் தனது 3 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது