அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி..!
Updated: Sep 23, 2026, 09:14 IST
2029 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, 'மாணவர் குரல்' என்ற தலைப்பில், மாநிலம் தோறும் சென்று, கல்லுாரி மாணவ, மாணவியரை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்.
தமிழகத்தில் ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சியை, பிரமாண்டமாக நடத்த காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டமிட்டுள்ளார்.
சென்னையில் காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், நேற்று அவர் தலைமையில், ஆலோசனை நடந்தது. இதில், ராகுலின் உதவியாளர் பைஜு மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும் அக்டோபர் முதல் வாரத்தில், ராகுல் காந்தி தமிழகம் அழைத்து வந்து, மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த தீர்மானிக்கப்பட்டது.