☰
×

‘BROTHER' எனக் குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்த ராகுல்காந்தி

 

மக்களவைத் தொகுதிகளை 850 இடங்களாக விரிவாக்கம் செய்வது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வரும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். 


இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில், "மக்களவைத் தொகுதிகளை 850 இடங்களாக விரிவாக்கம் செய்வது ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வரும். இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றி அமைக்க பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு வரம்பற்ற வாய்ப்பை வழங்கும். தமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின். தேசிய நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

திமுகவுடன் கூட்டணியில் இருந்த போது நான் இந்தியாவில் பிரதர் சகோதரர் என்று அழைக்கும் ஒரே தலைவர் முக ஸ்டாலின் தான் என ராகுல் காந்தி மேடைகளில் சொல்லியிருந்தார். அதுவே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்த உடன் மு க ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்து பிரதர் சகோதரர் என்ற  என்ற வார்த்தை இடம் பெறவில்லை. இப்பொழுது காங்கிரசுக்கு ஒரு காரியமாக வேண்டும் என்பதற்காக திமுக தலைவரை சந்திக்க வரும் பொழுது பிரதர் என்ற வார்த்தையை சகோதரர் என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியதற்கு பல்வேறு விமரசனங்கள் எழுந்துள்ளன.