×

ராகுல் காந்திக்கு நேரமில்லாதால் விஜய்யை சந்திக்கவில்லை- பிரவீன் சக்கரவர்த்தி

 

பிரதமர் உடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு முடிந்து நேற்று மாலை 6 மணிக்கு மேல் ராகுல் காந்தியுடனான சந்திப்புக்கு நேரம் கேட்டபோது, அவருக்கு நேரம் இல்லை என காங். நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் சக்ரவர்த்தி, “தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி சென்றார். அவருக்கு நேற்று 6 மணிக்கு பிரதமர் உடனான சந்திப்பு இருந்தது. ஆனால், 6 மணிக்கு மேல் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியிடம் சந்திப்பு நடைபெற நேரம் இல்லை. அதனால் அவரை சந்திக்கவில்லை. அடுத்த முறை விஜய் டெல்லி செல்லும்போது ராகுல்காந்தியை சந்திப்பார். நேற்று விஜய் ராகுல்காந்தியைச் சந்திப்பார் என்று யாரும் சொல்லவில்லை. அதனால் இது ஒரு பிரச்னையே இல்லை. இருவருக்கும் நேரம் ஒத்துப்போகாததால் சந்திப்பு நடைபெறவில்லை. அடுத்த முறை முதல்வர் டெல்லி செல்லும்போது நிச்சயம் சந்திப்பு இருக்கும்” என்றார்.

ஜூன் 11இல் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வருகிறார் முதல்வர் விஜய். அப்போது சோனியா காந்தி, ராகுல் காந்தியை கட்டாயம் சந்திப்பார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் ராகுலை சந்திக்க வந்துள்ளதால் இன்று அந்த சந்திப்பு நடைபெறவில்லை.  (கர்நாடகா முதலமைச்சர் சீதாராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய முதலமைச்சராக டி கே சிவகுமார் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.