நீதிமன்றம் செல்லும் வழியில் விபத்து... நூலிழையில் தப்பிய ராகுல் காந்தி!
2018ல் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசிய வழக்கை தள்ளுபடி செய்தது உத்தரப்பிரதேசம் சுல்தான்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வேயில், அவதூறு வழக்கு விசாரணைக்காகச் சுல்தான்பூர் நீதிமன்றம் சென்ற காங்கிரஸ் எம்பி ராகுலின் கான்வாய் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ்அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில், "உத்தரப் பிரதேசத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் வாகனத்திற்கு ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியளிக்கிறது! நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே பாதுகாப்பு உறுதி செய்யப்படாத சூழல் உருவாகியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. இது ஒரு சாதாரண விபத்து குறித்த கேள்வி மட்டுமல்ல; நாட்டின் உயரிய பொறுப்பில் உள்ள தலைவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இதற்குப் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்.
என்ன நடந்தது? பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்ததா? எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் யார் தவறிழைத்தார்கள்? ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பில் அலட்சியத்திற்கு இடமில்லை! அன்பு தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு என்பது ஒரு தனிநபரின் பாதுகாப்பு மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்தின் மாண்பையும் அரசியலமைப்புச் பொறுப்பையும் காக்கும் கடமையாகும். அமித்ஷா அவர்களே, மௌனம் வேண்டாம் — பதில் சொல்லுங்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.