×

"இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு"- எஸ். ஜானகி மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

 

 

பாடகி ஜானகி மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Deeply saddened by the passing of S. Janaki ji, the Nightingale of South India.

For generations of Indians, her voice was the soundtrack of love, devotion, joy and longing. Performing in multiple languages with extraordinary grace, she united people across regions through the… pic.twitter.com/ne08mxaw6P

— Rahul Gandhi (@RahulGandhi) July 12, 2026


இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், “தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட எஸ். ஜானகி ஜியின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. பல தலைமுறை இந்தியர்களுக்கு, அவரது குரல் அன்பு, பக்தி, மகிழ்ச்சி மற்றும் ஏக்கத்தின் இசையாக விளங்கியது. அபாரமான நேர்த்தியுடன் பல மொழிகளில் பாடி, இசை எனும் உலகளாவிய மொழியின் மூலம் பிராந்தியங்களைக் கடந்து மக்களை அவர் ஒன்றிணைத்தார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.