☰
×

"த.வெ.க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க தி.மு.கவிடம் காசு இல்லை"- ரகுபதி 

 

த.வெ.க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க தி.மு.கவிடம் காசு இல்லை என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, "தவெக எம். எல். ஏக்களை விலைக்கு வாங்கும் அளவிற்கு திமுகவிடம் பணம் இல்லை. குதிரை பேரத்தில் ஈடுபட திமுகவுக்கு எந்த அவசியமும் கிடையாது. 60-70 தவெக எம். எல். ஏக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். த.வெ.கவின் 70 எம். எல். ஏக்கள் தனியாக ஆட்சி நடத்த முடிவு எடுத்திருப்பதாக தகவல் வருகிறது இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மீண்டும் தேர்தல் வந்தால்  திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்.  தவெக எம். எல். ஏக்கள் வரம்பு மீறி பேசுவதுடன். அரசு அதிகாரிகளை மிரட்டுகின்றனர்.  வரம்பு மீறி செயல்படுவதால் அதிகாரிகள் குழம்பி போய் இருக்கிறார்கள்.. 6 மாதத்தில் தமிழ்நாடே சீரழிந்து விட்டது.

நாம் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.. என்ன நடக்க போகிறது என்று முதல்வரின் ஜோதிடரும் அவருக்கு ஆலோசனையை சொல்லி இருப்பார்.. நிச்சயம் தமிழ்நாட்டிற்கு உதயசூரியன் மூலமாக நல்ல காலம் பிறக்கும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒரு மனிதரே இல்லை. எதற்கு எடுத்தாலும் திமுக மீது பழி போடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது" என்றார்.