திருச்சி கிழக்கில் போட்டியா?- நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்
திருச்சி கிழக்கில் போட்டியிடுவது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
Hi everyone, News about me contesting in Trichy East election has been circulating across various media platforms.
— Raghava Lawrence (@offl_Lawrence) June 7, 2026
All my Media friends have been reaching out to me over phone and requesting to meet me asking for clarification. Since the speculation has grown to a point where I… pic.twitter.com/68ZyN6P0l9
இதுதொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில், “அனைவருக்கும் வணக்கம், நான் திருச்சி கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி பல்வேறு ஊடகங்களில் பரவி வருகிறது.எனது ஊடக நண்பர்கள் அனைவரும் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, இதுகுறித்து விளக்கம் கேட்டு என்னைச் சந்திக்கக் கோருகின்றனர். இந்த ஊகங்கள் ஒரு கட்டத்தில் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று நான் உணரும் அளவுக்கு வளர்ந்துவிட்டதால், இந்தக் குறிப்பைப் பகிர விரும்புகிறேன்.நான் தற்போது 'பென்ஸ்' படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறேன், எனது படப்பிடிப்பு 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவு வரும் 11ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.