மக்களை தெருநாயுடன் ஒப்பிட்டு ராகவா லாரன்ஸ் பேச்சு?
மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய பணிகளை பற்றி பேசிய போது தெருநாய்களுடன் ஒப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “தெருநாய்களுக்கு கூட அவற்றிற்கு பிடித்த உணவை கொடுக்க வேண்டும். அதே போன்று மக்களுக்கு தேவையானதை அறிந்து செய்ய
கால அவகாசம் தேவை. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகனின் செயல்பாடுகள் ரொம்ப பிடித்திருக்கிறது. முதலமைச்சருக்கு ஆதரவாக பேசியதால் என்னை விமர்சிப்பார்கள். களத்திற்கு ஏற்ற மாதிரி விளையாட நான் தயாராக இருக்கிறேன்.
கல்வித்துறை, அறநிலையத்துறை அமைச்சரின் நடவடிக்கைகள் பிடித்துள்ளது. அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கால அவகாசம் தேவைப்படுகிறது. மாற்றம் வேண்டும் என்று கேட்கிறீர்கள்; ஆனால், அதற்கான நேரம் கொடுக்க மாட்டீர்களா? எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சிக்க பொறாமைதான் காரணம். நாம் என்ன செய்தோம் என்பதை யோசித்து பார்த்துவிட்டு விமர்சனம் வைக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்துடன் வருகிறேனா என்பது எல்லாம் சஸ்பென்ஸ், ஒரு சில போன் கால் வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஆசியோடு தான் அனைத்து விஷயங்களையும் நான் செய்து வருகிறேன்” என்றார்.