×

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அவசியமில்லை- ராதாகிருஷ்ணன்

முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த தமிழகத்திலும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடத்தப்பட்டுவருகிறது. ஒருவேளை கொரோனா பாதிப்பு அதிகரித்தால், அத்தியாவசியம்
 

முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த தமிழகத்திலும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடத்தப்பட்டுவருகிறது.

ஒருவேளை கொரோனா பாதிப்பு அதிகரித்தால், அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகுகின்றனர், கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்” எனக்கூறினார்.